ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாணவி கோழிக்கோடு சப்-கலெக்டராக நியமனம்!

 
selshasini ias

ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கோழிக்கோடு சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் அரும்பாவூர் என்ற பகுதியை அடுத்த சோட்டபணிக்கன் தேரிவிளை என்ற பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்பவரது மகள் செல்சாசினி என்பவர் ஐஏஎஸ் பிடிப்பதில் உறுதியாக இருந்தார். தனது மகளின் ஆசையை நிறைவேற்ற வரதராஜன் வறுமை நிலையிலும் அவரை அக்கறையுடன் படிக்க படிக்க வைத்தார் 

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் செல்சாசினி தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து அவருக்கு மிசோரியில் நடந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டார். 

இந்த நிலையில் பயிற்சி முடித்து வந்துள்ள அவருக்கு தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட சப்கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் உள்பட அந்த பகுதியை சேர்ந்தவர்களே கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமை நிலையிலும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஆகவேண்டுமென்ற கனவுடன் இருந்த செல்சானியையும்  அவரை படிக்க வைத்த அவரது பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

From around the web