கனிமொழி எம்பி திடீர் கைது: முக ஸ்டாலின் கண்டனம்!

 

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹாத்ராஸ் என்ற பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தடையை மீறி ஹாத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களுக்கு ஆறுதல் அளித்தனர் என்பது குறிப்பிடத் தக்கவை 

இந்த நிலையில் இந்த விவகாரம் தமிழகத்திலும் வெடித்தது. உத்தரப் பிரதேச மாநில அரசை கண்டித்து திமுகவினர் இன்றும் பேரணி ஒன்றை நடத்தினார். கனிமொழி தலைமையில் நடந்த இந்த பேரணியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஹாத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த கைதுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார் 

அராஜகத்தை கண்டித்து திமுக மகளிர் அணி நடத்திய ஒளியேற்றிய பேரணியைத் தடுத்து தமிழக அரசு கைது செய்து செய்துள்ளது ஹாத்ராஸ் கொடூரத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடக்கிறதா? அதிமுக அரசு தனது அதிகாரத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web