பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை திறப்பு: கன்னியாகுமரி விவசாயிகள் மகிழ்ச்சி!

 
pechiparai

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர்ஆதாரங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து நேற்று விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் அனைத்து நீராதாரங்களும் நிரம்பி வழிகின்றன. இந்த மழை காரணமாக பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.66 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.89 அடியாகவும் சிற்றாறு ஒன்றில் 17.09 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்தது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பானத்திற்காக அணைகளில் இருந்து நீர் திறக்கப்படும் நிலையில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்தி கன்னியாகுமரியில் முதல் சாகுபடியான கன்னிப்பூ நடவுப்பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web