ரஜினி சென்னை வருகையால் கண்டுகொள்ளாமல் போன கமல் பிரச்சாரம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்ற செய்தி காலையிலிருந்தே தலைப்புச் செய்திகளாக அனைத்து ஊடகங்களையும் வெளியாகிக் கொண்டிருந்தன
குறிப்பாக இன்று மதியம் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது உறுதி என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனை முன் ரசிகர்கள் குவிந்தனர். ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வரும் போது வரை அவர் குறித்த செய்திகள் அவ்வப்போது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பிரேக்கிங் செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தது
அதுமட்டுமின்றி தனி விமானத்தில் அவர் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த பின்னரும் சென்னை விமான நிலையத்திலிருந்து போயஸ் கார்டன் வரும் வரையிலும் ஒவ்வொரு செய்தியையும் பிரேக்கிங் செய்திகளாக முன்னணி ஊடகங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இன்று ரஜினி குறித்த ஒட்டுமொத்த செய்தியின் காரணம் திருச்சியில் பிரச்சாரம் செய்துவரும் கமல்ஹாசனை எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மய்யத்தின் சமூக வலைதளங்கள் பக்கங்களில் மட்டுமே அவரது பிரச்சாரம் குறித்த செய்திகளை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உடன் வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது