உங்களின் சேவையால் தான் உலகம் பயமின்றி சுவாசிக்கிறது: கமல் டுவீட்

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே கடும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மட்டும் சேவை மனப்பான்மையுடன் கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ துறைக்கும் மருத்துவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது. அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது: மனித இனத்திற்கு எதிரான இந்த கொரோனா தாக்குதலுக்கு எதிராக இரவு, பகல்,
 
உங்களின் சேவையால் தான் உலகம் பயமின்றி சுவாசிக்கிறது: கமல் டுவீட்

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே கடும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மட்டும் சேவை மனப்பான்மையுடன் கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவ துறைக்கும் மருத்துவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது. அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:

மனித இனத்திற்கு எதிரான இந்த கொரோனா தாக்குதலுக்கு எதிராக இரவு, பகல், பாராமல் அயராது போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தனக்கென பாராமல் பிறர்க்காக போராடும் உங்களின் சேவையால் தான் உலகம் பயமின்றி சுவாசிக்கிறது.

From around the web