சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்ற கமல்ஹாசன் எதிர்ப்பு

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக இந்த பரிந்துரைக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் பெற்று விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது எனவே இந்த வழக்கு வெகுவிரைவில் சிபிஐ விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக
 

சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்ற கமல்ஹாசன் எதிர்ப்பு

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக இந்த பரிந்துரைக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் பெற்று விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே இந்த வழக்கு வெகுவிரைவில் சிபிஐ விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் புலனாய்வுத் துறைக்கு, சாத்தான்குளம் காவல் துறையினர் ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

எனவே சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றுவது குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்ற நடிகர் கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் ஐபிசி 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். சிபிஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி என தெரிவித்துள்ளார்.

From around the web