உலக நாயகனாக இருந்தாலும் கமல் ஒரு முட்டாள்: எச் ராஜா விமர்சனம்

 
உலக நாயகனாக இருந்தாலும் கமல் ஒரு முட்டாள்: எச் ராஜா விமர்சனம்

உலக நாயகனாக இருந்தாலும் கமலஹாசன் உண்மையில் ஒரு முட்டாள் என பாஜகவின் எச் ராஜா தான் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில வருடங்களாகவே பாஜக தலைவர்களுக்கும் கமல்ஹாசனுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா பெரியாரை பின்பற்றுவதால் கமல்ஹாசன் ஒரு முட்டாள் என்று கூறியுள்ளார் 

வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர் இருந்தாலும் சரி மொபைல் டாய்லட் இருந்தாலும் சரி உடனே சந்தேகப்படுகிறார். இவரெல்லாம் ஒரு உலக நாயகனா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் 

kamal

ஸ்டாலின் முட்டாள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆனால் கமல்ஹாசனும் பெரியாரை பின்பற்றுவதால் முட்டாள் தான் என்றும், தமிழ்நாடு முட்டாள்களின் உலகமாக மாறி வருகிறது என்றும் எச் ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த விமர்சனத்துக்கு கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web