சென்னையில் பிரச்சாரத்தில் கலக்கும் கமல்ஹாசன்: திராவிட கட்சிகள் கலக்கம்!

 

கடந்த வாரம் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று சென்னை காஞ்சிபுரம் பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். இன்று மாலை அவர் போரூர் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது ’சட்டப்பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என்றும் உப்பை சுவாசித்த அவரிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும்’ என்றும் கூறினார்

மேலும் நல்லதை நினைக்கும் எல்லோரும் எம்ஜிஆர் வாரிசுதான் என்றும் அதனால் நானும் எம்ஜிஆரின் வாரிசுதான் என்றும் அவர் விளக்கமளித்தார். கமலஹாசன் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் அலைமோதி வருவதை பார்த்து திராவிட கட்சிகள் கலக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது

kamal chennai1

ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை தேர்தல் பிரச்சாரமும், வெள்ளியன்று ஓய்வும் பின்னர் சனி, ஞாயிறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகவும் கமல்ஹாசன் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் நான்கு வாரத்தில் முடிந்துவிடும் என்றும், அதன்பின்னர் வாரம் முழுவதும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது

மேலும் வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதுவரை ‘இந்தியன் 2’ மற்றும் ‘விக்ரம்’ படங்களின் படப்பிடிப்பு இருக்காது என்றும், தேர்தலுக்கு பின்னரே இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

From around the web