கமல்ஹாசனுக்காக நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட மகள்: வைரல் வீடியோ

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அந்த தொகுதியில் அவருடைய மகள் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது 

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார் என்பது தெரிந்ததே. அவர் பிரச்சாரம் செய்தபோது அவருக்கு உதவியாக அவருடைய மகள் அக்ஷராஹாசன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது 

akshara

அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் சுகாசினியும் கையில் டார்ச் லைட் வைத்துக்கொண்டு கோவை தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென சுஹாசினியும், அக்ஷரா ஹாசனும் கோவையில் உள்ள ஒரு தெருவில் குத்தாட்டம் ஆடி வாக்காளர்களிடம் வாக்கு கேட்டனர். இது குறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியது. தந்தை கமல்ஹாசனுக்காக மகள் அக்ஷரா ஹாசன் வேற லெவல் குத்தாட்டம் ஆடிய வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்


 


 

From around the web