பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி அறிவிப்பு? தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றமா?

 
gold loan

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 5 சவரன் உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது இந்தக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில் வரும் பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 5 சவரனுக்குட்பட்ட நகை கடன் தள்ளுபடி என்று அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த 2018-19, 2019-20, 2020-21 ஆகிய ஆண்டுகளில் வழங்கிய நகை கடன் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து வரும் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த அறிவிப்பு வெளியானால் தமிழக மக்களின் மிகப் பெரிய மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திமுக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இன் நகை கடன் தள்ளுபடி செய்தால் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web