ஜெயலலிதா பாணியில் செம வேகத்தில் செல்லும் எடப்பாடியார்: அதிர்ச்சியில் திமுக

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன

திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் பிரச்சாரத்துக்கு செல்லுமிடங்களில் கொடுக்கும் வாக்குறுதிகளை எல்லாம் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நிறைவேற்றி வருகிறார் 

விவசாயிகளின் கடன் ரத்து உள்பட பல்வேறு திட்டங்களை அவர் அதிரடியாக நிறைவேற்றி வரும் நிலையில் திமுகவுக்கு அடுத்து என்ன வாக்குறுதி கொடுப்பது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றது

jayalalitha

இந்த நிலையில் தற்போது அதிரடியாக ஜெயலலிதா பாணியில் அதிமுக விருப்பமான மனுக்களையும் விநியோகித்து தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டது. ஜெயலலிதாதான்  மற்ற கட்சிகளை விட முந்தி கொண்டு விருப்ப மனுக்களை அறிவிப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது, பிரச்சாரத்துக்கு கிளப்பி விடுவது ஆகியவைகளை செய்வார். அதே வேகத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமியும் சென்று கொண்டிருக்கிறார்

ஒவ்வொரு விஷயத்திலும் அவர் ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டி வருவதால் மீண்டும் அவர் வெற்றி பெற்று முதல்வர் பதவியில் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் அதிரடி வேகத்தை பார்த்து திமுக அதிர்ச்சியில் உள்ளது.

From around the web