ஐடி ரெய்டு எதிரொலி: நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்

கடந்த வாரம் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமானவரி தரப்பிலிருந்து செய்திகள் கசிந்தன. ஆனால் அதே நேரத்தில் விஜய் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட முறைகேடான ரூபாய் பணம் கைப்பற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டது இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
 
ஐடி ரெய்டு எதிரொலி: நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்

கடந்த வாரம் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமானவரி தரப்பிலிருந்து செய்திகள் கசிந்தன.

ஆனால் அதே நேரத்தில் விஜய் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட முறைகேடான ரூபாய் பணம் கைப்பற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விஜய்க்கு மட்டுமின்றி ஏஜிஎஸ் மட்டும் அன்புச்செழியன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியபோது ’சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்க விஜய், பைனான்சியர் அன்புச்செல்வன் மற்றும் ஏஜிஎஸ் ஆகியோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

From around the web