ஜெர்மனி வாழ் இலங்கை பெண்ணிடம் ஏமாந்தது ஆர்யா இல்லையா? திடீர் திருப்பம்

 
arya


ஜெர்மனி வாழ் இலங்கை பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதால் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜெர்மன் வாழ் இலங்கை பெண் ஒருவர் தன்னை ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 71 லட்சம் பணம் பெற்றதாகவும் ஆனால் திருமணம் செய்யாமல் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார் 

இந்த புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்யா மீது விசாரணை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஆர்யா போல் நடித்து இலங்கைவாழ் தமிழ் பெண்ணிடம் ஏமாற்றி உள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் சமூக வலைத்தளம் மூலம் ஆர்யா போல் நடித்து ஜெர்மனி பெண்ணை ஏமாற்றி 71 லட்சம் பணம் பெற்று உள்ளதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது

இதனை அடுத்து முகம்மது அர்மான் மற்றும் முகமது உசேன் ஆகிய இருவரை சென்னை போல் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web