பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? கமலுக்கு வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி!

 

மக்கள் நீதி மய்யம் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வானதி சீனிவாசன் போன்ற துக்கடா அரசியல்வாதிகளுடன் எங்கள் தலைவர் கமல்ஹாசன் விவாதம் செய்ய மாட்டார் என்றும் பிரதமர் மோடி நிதி மற்றும் நிதி அமைச்சர் உள்பட அமைச்சர்களுடன் அவர் விவாதம் செய்ய விரும்புவதாகவும் அதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஏற்பாடு செய்து தந்தால் விவாதம் நடக்கும் என்றும் தெரிவித்து இருந்தனர்.

தன்னை ஒரு துக்கடா அரசியல்வாதி என கூறியதற்கு வானதி சீனிவாசன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றில் அவர் கூறியதாவது:  மத்தியில் அரசாங்கத்தை அமைத்து இருக்கும் ஒரு கட்சி, பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி பாஜக. ஒரு பெண்ணாக நானும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறேன்

ஆனால் கமல் அவர்கள் வானதியுடன் விவாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கூறியதற்கு என்னை துக்கடா அரசியல்வாதி என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறி உள்ளனர். நான் இங்கே ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து அரசு பள்ளியில் படித்து, வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், குடும்பம் இருக்கிறது. இதையும் மீறி நான் மக்களுக்காக சேவை செய்து வருகிறேன் 

vanathi kamal

கடந்த 5 ஆண்டுகளாக நான் இந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன செய்துள்ளேன் என்பதை என்னுடைய சமூக ஊடகத்தில் எடுத்து பாருங்கள், தெரியும். ஆனால் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறார்கள் என்றால் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து அரசியலில் உயர்ந்த ஒருவரை பார்த்து இப்படித்தான் கேவலப்படுத்துவதா? என சிந்தித்து பாருங்கள். உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் இதே போன்று கஷ்டம் இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார். இப்படி முன்னேறிவரும் பெண்களுக்கு, பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் மீது இவர்கள் வைக்கும் விமர்சனம் இதுதானா? இப்படிப்பட்டவர்கள் பெண்களை எப்படி காப்பாற்றுவார்கள்? பெண்கள் நலனில் எப்படி அக்கறை செலுத்துவார்கள்? மக்கள் நீதி மய்யம் கமல் அவர்கள் இதற்கு பதில் சொல்லவேண்டும். அவர் முன் இந்த கேள்வியை வைக்கிறேன்’ என்று வானதி கூறியுள்ளார். 

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியிருந்தார்

From around the web