முதல்வர் வேட்பாளரின் திடீர் மாற்றமா? என்ன நடக்குது கமல் கட்சியில்?

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தான் அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. மேலும் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் அறிவிக்கப்பட்டது 

இந்த நிலையில் தற்போது திடீரென முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தன் என்ற அறிவிப்பில் இருந்து அக்கட்சி பின்வாங்கி உள்ளதாக தெரிகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகி முரளி அப்பாஸ் அவர்கள் கூறியபோது ’தேர்தல் கூட்டணி அமையும் போது யார் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் என்று கூறியதோடு அப்படி அமையும் கூட்டணி வைத்ததால்தான் முதல்வர் வேட்பாளராக கமல் தான் இருப்பாரா என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.

kamal

மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக போன்ற பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது முதல்வர் வேட்பாளர் என்ற கொள்கையிலிருந்து அக்கட்சி பின்வாங்கும் என்று என்றுதான் இதன் பொருள் என புரிந்து கொள்ள முடிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்றைய முரளி அப்பாஸ் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web