10,11,12 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு உண்டா? அமைச்சர் பதில்!

 

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளி இறுதி தேர்வுகள் நடைபெறவில்லை என்பதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

அதேபோல் இந்த கல்வி ஆண்டிலும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது என்பதும் அதே நேரத்தில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 

exam

இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டில் முழு ஆண்டு தேர்வு நடக்குமா அல்லது ஜீரோ கல்வி ஆண்டாக மாறுமா என்ற அச்சத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளனர். இந்த நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் பொது தேர்வு குறித்த கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார் 

இருப்பினும் இந்த தேர்வு ஆன்லைனில் எழுதுவதா? அல்லது நேரில் வந்து எழுதும் தேர்வா? என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இரண்டாம் அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கும் நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

From around the web