பள்ளி, கல்லூரிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுகிறதா?

 

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள கருத்துக்கள் எதிரொலியால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல் வெளிவந்துள்ளது

இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை எனவும் தகவல் வெளியாகியுள்ளது

முன்னதாக தமிழகம் முழுவதும் வரும் 16ஆம் தேதி 9,10,11,12ஆம் வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. ஆனாலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பள்ளி, கல்லூரிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுகிறதா? என்பது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web