ஸ்டெர்லைட் ஆக்சிஜன் மருத்துவத்திற்கு பயன்படாதா? அதிர்ச்சி தகவல்

 
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் மருத்துவத்திற்கு பயன்படாதா? அதிர்ச்சி தகவல்

ஆக்சிஜன் தேவைக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து 5 தீர்மானங்கள் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

நான்கு மாதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றும் அதில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் பெரும்பாலான தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது 

sterlite

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது என்று கூறப்படுகிறது. இது குறித்து நீதிபதிகள் கேள்வி ஒன்றுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் பதிலளித்துள்ளார் 

மருத்துவத்திற்கு உபயோகப்படும் ஆக்சிஜனின் சுத்தத் தன்மை 94% இருக்க வேண்டும் என்றும் ஆனால் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் 35 சதவீதம் மட்டுமே சுத்தத்தன்மை இருக்கும் என்றும் அது ஆலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், மருத்துவத்திற்கு பயன்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web