பாஜகவில் இணைகிறாரா சிவாஜியின் மகன்?

தமிழ் திரை உலகில் உள்ள பல நடிகர் நடிகைகள் கடந்த சில மாதங்களில் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குஷ்பு உள்பட பல நடிகர் நடிகைகள் பாஜகவில் இணைந்ததை அடுத்து அக்கட்சி வளர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்ததாக சிவாஜி கணேசனின் மகனும் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகரும் தயாரிப்பாளருமான ராம்குமார் பாஜகவில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் இந்த தகவல் கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக தேசிய செயலாளரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி முன்னிலையில் நாளை ராம்குமார் பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிவாஜி கணேசன் உள்பட அவரது குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் தற்போது சிவாஜிகணேசனின் மகன் பாஜகவில் இணைய இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவாஜிகணேசனின் மகன் ராம்குமார் பாஜகவில் இணைவதால் அக்கட்சிக்கு எந்த அளவுக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்