தமிழகக் காங்கிரஸ் தலைவராகிறாரா கார்த்திக் சிதம்பரம்? பரபரப்பு தகவல் 

 

தமிழக காங்கிரஸ் தலைவராக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேஎஸ் அழகிரி மீது அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் இதனால் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றி திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 

மேலும் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசல்களை கேஎஸ் அழகிரி சரியாக கையாளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் இதுகுறித்து கூறிய போது காங்கிரஸ் கட்சியை கேஎஸ் அழகிரி படுபாதாளத்திற்கு தள்ளி விட்டார் என்று கூறியுள்ளார் 
மேலும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் மகனும், சிவகெங்கை தொகுதி மக்களவை எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் தான் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக போகிறார் என்றும் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். கராத்தே தியாகராஜனின் இந்த தகவல் காங்கிரஸ் கட்சியின் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web