ராஜ்யசபா எம்பி ஆகிறாரா ஜெயகுமார்?

 
ராஜ்யசபா எம்பி ஆகிறாரா ஜெயகுமார்?

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி அடைந்தது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் அந்த தொகுதி மக்களுக்கு மிகவும் பழக்கமானவர் என்பதால் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐட்ரிம்ஸ் தியேட்டர் உரிமையாளர் ஜெயகுமாரை தோற்கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தனது தோல்விக்கு காரணம் அதிமுகவினரின் உள்ளடி வேலை தான் என்று அதிருப்தியில் இருந்த ஜெயக்குமாரை தற்போது ஈபிஎஸ் தரப்பு சமாதானப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கண்டிப்பாக கிடைக்கும் என்றும் அதனால் எப்பொழுதும் போல் அதிமுகவில் சுறுசுறுப்பாக செயல்படுங்கள் என்று ஈபிஎஸ் தரப்பு உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது 

jayakumar

எனவே விரைவில் ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வரும் போது ஜெயக்குமார் அதில் ஒரு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஜெயக்குமார் தரப்பினர் மீண்டும் மகிழ்ச்சியில் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web