நகை வாங்க சரியான நேரமா? சென்னையில் இன்றைய தங்கம் விலை!

 
gold

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதால் சென்னை உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமும் கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று திடீரென சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 320 தங்கத்தின் விலை குறைந்து உள்ளதால் தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். சென்னையில் இன்று தங்க ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 40 குறைந்து உள்ளது என்பதும் சவரன் ஒன்றுக்கு 320 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.4944 எனவும், 8 கிராம் ரூ.39,552 எனவும் விற்பனையாகி வருகிறது.

 அதேபோல் சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ.49585 எனவும், 8 கிராம் ரூ.36680 எனவும், விற்பனையாகி வருகிறது.

அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை விலை ரூ.75.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.75500 எனவும், விற்பனையாகி வருகிறது.
 

From around the web