ஒரே கூட்டணியில் தேமுதிக, பாமக இருக்க வாய்ப்பு உள்ளதா? ஜிகே மணி பேட்டி

 

ஒரே கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சற்று முன்னர் பாமக தலைவர் ஜிகே மணி பதிலளித்துள்ளார் 

கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளுக்கும் கருத்து முரண்பாடுகள் இருந்தது என்பதும் ஒரு கட்சி இருக்கும் கூட்டணியில் இன்னொரு கட்சி இடம்பெறாது என்று கூறி வந்தது தெரிந்ததே

vijayakanth

இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றன. இருப்பினும் தேர்தல் பிரசாரத்தின் போது இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே சில சச்சரவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது 

இந்த நிலையில் தேமுதிக இருக்கும் கூட்டணியில் பாமக இடம்பெறாது என்றும் பாமக இருக்கும் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது என்றும் அக்கட்சிகளின் ஒருசில தலைவர்கள் தெரிவித்து வந்தனர் 

ஆனால் இந்த தகவலை பாமக தலைவர் ஜிகே மணி மறுத்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைந்து பணியாற்றினோம். எனவே வரும் தேர்தலில் தேமுதிக இருக்கும் கூட்டணியில் பாமக இடம் பெறுவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

From around the web