பள்ளிக்கு வரவேண்டும் என்பது கட்டாயமா? அமைச்சர் பதில்

 
students

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வகுப்புகளுக்கு மாணவர்கள் வர வேண்டிய கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

செப்டம்பர் 1 முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் தொடங்கினாலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்றும் மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என்றும் கூறி வழக்கு ஒன்று தொடரப்பட்டது 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்றும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நேரடி வகுப்புகள் தொடங்கினாலும் ஆன்லைன் மூலமாக கல்வி தொலைக்காட்சியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஆன்லைன் வகுப்புகள் எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாது என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளது

From around the web