தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா? நடிகை கஸ்தூரி ஆவேச டுவிட்!

 
kasturi

தாலியை விட தங்கம் தான் முக்கியமாக போனதா? என நடிகை கஸ்தூரி ஆவேசமாக டுவிட்டரில் ஆவேசமாக டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்த தமிழக அரசு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களிலும் ஊரடங்கு இல்லை என்றும் இந்த இரண்டு நாட்களில் அனைத்து பேருந்துகளும் இயங்கும் என்றும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று அறிவித்திருந்தது

இதனை அடுத்து பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு காய்கறிகள் மளிகை பொருட்களை வாங்க குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் அணியாமல் பலரும் காய்கறி வாங்க சென்று கொரோனாவை பரப்பி வந்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டுமின்றி ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகளிலும் கூட்டம் கூடியது தான் பெரும் ஆச்சரியம். இந்த கொரோனா நேரத்தில் நகைகளும் ஜவுளிகளும் வாங்க வேண்டுமா? என்று பல சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற கடைகளை திறக்க அனுமதித்த அரசையும் அவர்கள் கண்டித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

முண்டியடிச்சி துணி  நகை வாங்கலையின்னாதான் என்னவாம்? தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா? சேப்டிய விட சேலை முக்கியமா ?  கல்யாணம்/சடங்கு  மாதிரி தவிர்க்கமுடியாத  purchasesகு whatsapp, phone, online எல்லா option உம் இருக்கு. கடைக்கு போயி கொரோனாவை எதுக்கு வாங்கணும்? COVIDIOTS


 

From around the web