மீண்டும் தர்மயுத்தம் செய்கிறாரா துணை முதல்வர் ஓபிஎஸ்? பரபரப்பு தகவல் 

 

முதல்வர் இபிஎஸ் உடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் செய்யப்போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

அதுமட்டுமின்றி அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் அரசு நிகழ்ச்சிகளில் அவருடைய பெயர் நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. குறிப்பாக இன்று சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் திடீரென துணை முதல்வரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே துணை முதல்வர் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அதிமுக அறிவிக்கவுள்ளது. அந்த அறிவிப்பில் ஈபிஎஸ் பெயர் தான் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அக்டோபர் 7 ஆம் தேதி துணை முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மீண்டும் தர்மயுத்தம் செய்யப்போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த தகவல் ஓபிஎஸ் தரப்பிலிருந்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

துணை முதல்வர் ஓபிஎஸ் பின்னனியில் பாஜக மேலிடம் இருப்பதாகவும், அந்த தைரியத்தில் தான் ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கையை எடுக்கவிருப்பதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web