இன்று உருவாகிறதா ‘கலைஞர் திமுக’: ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்யும் அழகிரி

மறைந்த திமுக தலைவரின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனையின் போது அவர் ’கலைஞர் திமுக’ என்ற புதிய கட்சியை தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே மதுரையின் பல இடங்களில் கலங்க ’கலைஞர் திமுக’ என அழகிரியின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டிய நிலையில் இன்று புதிய கட்சி உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
கலைஞர் திமுக என்ற கட்சியைத் தொடங்கும் அழகிரி, வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் ஆனால் அவர் எந்த அணியில் இணைந்து போட்டியிடுவார் என்பதை அவர் விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர் தனித்து போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது
கலைஞர் திமுக உருவானால் அதில் முக அழகிரி தான் தலைவராக இருப்பார் என்றும் இளைஞரணி செயலாளராக தயாநிதி அழகிரி இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்
முக அழகிரியின் கலைஞர் திமுக உருவானால் தென் மாவட்டங்களில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை வரும் தேர்தல் முடிவில் தான் தெரியவரும்