அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பாஜக உறுப்பினரா? உதயநிதி

 

அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இதில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

ஈபிஎஸ் தான் நிரந்தர முதல்வர் என்று ஒரு பிரிவினரும் ஓபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என ஒரு சிலரும் கூறி வருவதால் அதிமுகவில் இரு அணிகள் பகிரங்கமாகவே மோதும் காலம் வெகுவிரைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் முதல்வர் வேட்பாளருக்கு போட்டி போடும் ஓபிஎஸ் ஈபிஎஸ் குறித்து திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி இதுகுறித்து கூறியதாவது: அதிமுகவில் இரண்டு பேர் முதல்வர் வேட்பாளருக்கு போட்டி போடுகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பாஜக உறுப்பினரை கூட முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறி உள்ளார். உதயநிதி இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web