மிரட்டும் கருப்பு பூஞ்சை: பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தல்!

 
black fungus

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 847 கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

ஊக்க மருந்துகளை அதிகம் பயன்படுத்துவோர், நீரிழிவு நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் ஆகியோர்களை கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தாக்கும் என்றும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது குளிர்ச்சியான ஆக்சிஜன் வழங்கியதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும்போதே கருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துகளை அளித்தால் கருப்பு பூஞ்சை நோயில் இருந்தும் நோயாளிகள் தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்தாக அறிவிக்கப்பட்டிருக்கும் அம்போடெரிசின் பி என்ற மருந்தின் தேவை அதிகரித்துள்ளதாகவும் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்தை மத்திய அரசு அதிக அளவில் அனுப்பி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயில் இருந்து தப்பிக்க பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web