பாஜகவில் இணையும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளர்!

கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் பிரமாண்டமாக தனது கட்சியின் பெயரை அறிவித்தார் என்பதும் அதன் பின்னர் ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதோடு தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த முறை கமல்ஹாசனே தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர் இந்த நிலையில் தேர்தல் வந்துவிட்டாலே ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சி தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று திடீரென பாஜகவில் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இன்று தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் மக்கள் நீதி மையம் கட்சியின் தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது