சுதந்திர தின விருதுகள் அறிவிப்பு: தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது

இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் சற்று முன்னர் பிரதமர் மோடி கொடியை ஏற்றி உரையாற்றினார். இந்த நிலையில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் கொடியேற்ற உள்ளார் இந்த நிலையில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டது.
 

இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் சற்று முன்னர் பிரதமர் மோடி கொடியை ஏற்றி உரையாற்றினார். இந்த நிலையில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் கொடியேற்ற உள்ளார்

இந்த நிலையில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் சமீபத்தில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இளைஞர்களை தங்கள் உயிரையும் மானத்தையும் பொருட்படுத்தாமல் தாங்கள் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து அதை முடிச்சுப்போட்டு இளைஞர்களை நோக்கி வீசி காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் டாக்டர் அப்துல் கலாம் விருது நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனம் செல்வகுமார் அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் மாநில விருதுகள் மதுரையைச் சேர்ந்த அருண்குமார், கடலூரைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் சென்னையைச் சேர்ந்த அம்பேத்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

மேலும் சிறந்த மாநகராட்சியாக கோவையும், சிறந்த நகராட்சியாக விழுப்புரம், கரூர் மற்றும் கூத்தநல்லூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் வனவாசி, வீரபாண்டி, மதுக்கரை ஆகியவை சிறந்த பேரூராட்சிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web