ரேசன் கடை பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு; இந்த விண்ணபத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்!

 
ration store

வயதானவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வர முடியவில்லை என்றால் அவர்கள் ஒரு நபரை அங்கீகரித்து விண்ணப்பத்தை பதிவு செய்து கொடுக்கலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது

இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக அரசு இதுகுறித்து விண்ணப்ப படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தில் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரை பதிவு செய்து ரேஷன் கடையில் கொடுத்து விட்டால் அவருக்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது 

மற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் இந்த வசதியை பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தான் அது நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கீழ்கண்ட விண்ணப்ப படிவத்தை தேவையான நபர்கள் பூர்த்தி செய்து ரேஷன் கடைகள் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு காலக்கெடு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web