இன்று முக்கிய அறிவிப்பு: ஊரடங்கு நீட்டிப்பா?

 
stalin

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு வாரமும் ஊரடங்கை நீட்டித்து வரும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே தமிழகத்தில் அறிவித்த ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார் 

இந்த ஆலோசனைக்கு பின் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்க முதல்வர் முடிவு செய்வார் என்றும், குறிப்பாக நீச்சல் குளங்கள், பார்கள் திறக்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் திரையரங்குகள் சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்க படலாம் என்றும் தெரிகிறது.

இன்றைய ஆலோசனைக்கு பின்னர் இன்று மாலை அல்லது நாளை காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஜூலை 26 வரை ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

From around the web