நீட் தேர்வு தாக்கம்: முதல்வரிடம் ஏகே ராஜன் அறிக்கை தாக்கல்

 
ak rajan team

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட குழு நாளை அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

தமிழகத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏகே ராஜன் அவர்களின் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த குழு பல மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சந்தித்து கருத்து கேட்டது என்பதும் இது குறித்து அறிக்கை தயாராகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழு உச்சநீதிமன்ற உத்தரவை மீறவில்லை என்றும் அந்த குழு சட்டப்படி தான் இயங்கி வருகிறது என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் ஏகே ராஜன் குழுவினர் நாளை அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த அறிக்கைக்கு பின்னர் தமிழக அரசு நீட் தேர்வு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

From around the web