சென்னை மக்களுக்கு உடனடியாக தடுப்பூசி: மாநகராட்சி கமிஷனர் தகவல்!

 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. நேற்று கூட தமிழகத்தில் சுமார் 1500 பேர்களும், சென்னையில் சுமார் 500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தற்போது புதிய கோரிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்துள்ளார்.

corporation

சென்னையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்பூசியை அதிகம் எடுத்துக்கொள்ளும் நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகம் குறைந்து வருகிறது என்றும், எனவே சென்னையில் உள்ள மக்கள் இனியும் தாமதிக்காமல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் மையங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web