அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை: ஸ்டாலின் உத்தரவு

 
amma unavagam

அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் 

தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இன்று காலை சென்னையில் உள்ள அம்மா உணவகம் ஒன்றை மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கினார்கள். அம்மா உணவகம் என்ற பெயர் பலகையையும் அவர்கள் தூக்கி எறிந்தனர். மேலும் இனிமேல் இது கலைஞர் உணவகம் என்றும் அவர்கள் கூறி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 


இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து முக ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அவர் அம்மா உணவகம் பெயர் பலகையை திரும்ப மாட்டுமாறு பெயர் பலகையை எடுத்தவர்கள் மீதும் உணவகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

இந்த தகவலை சைதாப்பேட்டை எம்எல்ஏ மா சுப்பிரமணியன் அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இது குறித்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார். அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்த ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web