முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி சோதனை!

 
MR vijayabaskar

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த சில மணி நேரங்களாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர் இவர் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் 

இந்த சோதனை மொத்தம் 21 இடங்களில் நடைபெற்று வருவதாகவும் அதில் 20 இடங்கள் கரூரிலும், சென்னையில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

கரூர் மாவட்டத்தில் உள்ள 20 இடங்களில் 20 டிஎஸ்பிக்கள் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது என்றும் சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி என்பவர் தலைமையில் சோதனை நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது 

கடந்த இரண்டு மணி நேரமாக சோதனை நடந்து வரும் நிலையில் சோதனையின் முடிவில் தான் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web