பிழை செய்யமாட்டேன், வரலாற்று சரித்திரம் படைப்பேன்: முதல்வர் குற்றச்சாட்டுக்கு தமிழிசை பதிலடி

 

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் வரலாற்றுப் பிழை செய்து விட்டார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டிய நிலையில் நான் எப்பொழுதும் வரலாற்று சரித்திரம்தான் படைப்பேன் பிழை செய்யமாட்டேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார் 

புதுவை முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை வரும் 22ஆம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என சமீபத்தில் துணைநிலை ஆளுநர் ஆக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் அவர் நியமன உறுப்பினர்களை பாஜக உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டு வரலாற்று பிழை செய்துவிட்டதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார் 

narayanasamy

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ’நான் எப்பொழுதுமே வரலாற்றுச் சரித்திரம் தான் படைப்பேன், பிழை செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு புதுவை ஆளுநர் தமிழிசை அவர்கள் அளித்துள்ள பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web