கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபடுவேன்: பிரபல நடிகை

 

கணவருடன் இணைந்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் அதிமுக மற்றும் திமுக உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

radhika


இந்நிலையில் வரும் தேர்தலில் இவரது கட்சி அதிமுக கூட்டணியில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போவதாகவும் கணவருடன் இணைந்து முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து வரும் தேர்தலில் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்வார் என்றும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுகு பேட்டி அளித்த நடிகர் சரத்குமார் ஒரு சீட்டு அல்லது இரண்டு சீட்டுகளுக்கு அரசியலில் இருக்கப்போவதில்லை என்னும் வரும் தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு தனிச் சின்னம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web