அது என்றைக்கு நடக்கும் என எனக்கே தெரியாது, ஆனால் நடக்கும்: தினகரன்

 

அதிமுகவை மீட்டெடுக்கும் நாள் என்றைக்கு நடக்கும் என்று எனக்கு தெரியாது, ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்பியுள்ள நிலையில், அவர் அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மௌனமாக ஓய்வு எடுத்து வரும் சசிகலா எப்போது தனது அரசியல் காய்களை நகர்த்துவார் என்று தெரியாத நிலையில் அதிமுகவினர் பெரும் பரபரப்பில் உள்ளனர் 

ops eps

இந்த நிலையில் அதிமுகவை மீட்டெடுக்க தான் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தோம் என்றும், பேசுபவர்கள் பேசட்டும் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் 

அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என எனக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக மீட்டெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும், வரும் தேர்தலுக்கு முன் அதிமுக சசிகலாவின் கைக்கு மாறிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web