சசிகலா ஒழிக என என்னால் ஒரு லட்சம் போஸ்டர் ஒட்ட முடியும்: அமைச்சர் சிவி சண்முகம்

 

சசிகலா வாழ்க என அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியது குறித்து கருத்து கூறிய அமைச்சர் சிவி சண்முகம் 'என்னால் நாளைக்கே சசிகலா ஒழிக என ஒரு லட்சம் போஸ்டர்கள் ஒட்ட முடியும்' என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் சசிகலாவை வரவேற்க அதிமுகவினர் சிலர் போஸ்டர் அடித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

sasikala

இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சிவி சண்முகம் அவர்களிடம் ’சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவின் நிர்வாகிகளே போஸ்டர் ஒட்டி உள்ளனர் என்றும் அதிமுகவின் நிரந்தர செயலாளர் என்று சசிகலாவை அழைத்து வருகின்றனர் என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘போஸ்டர் அடிப்பது என்பது பெரிய விஷயமா? நான் நினைத்தால் நாளைக்கு சசிகலா ஒழிக என ஒரு லட்சம் போஸ்டர் ஒட்ட முடியும்’ என்று கூறினார். அமைச்சர் சிவி சண்முகத்தின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web