ரஜினியை நேரில் சந்திக்கப் போகிறேன்: கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் தனது உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார் 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை, அவரது ஆதரவு யாருக்கு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அவர் பாஜகவுக்கு அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பார் என்றும், அல்லது கமல் கட்சிக்கு ஆதரவளிப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவர் திமுகவுக்கு கண்டிப்பாக ஆதரவு அளிக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது 

rajini kamal

இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சென்னை சென்றதும் ரஜினியை நேரில் சந்திப்பேன் என்றும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து விட்டு அதன் பின்னர் எனது கட்சிக்கு ஆதரவு கேட்பேன் என்றும் அவர் கூறியுள்ளார் 

ரஜினியிடம் ஆதரவு கேட்க முடிவு செய்துள்ள கமல்ஹாசனுக்கு ரஜினியின் ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web