தமிழகம் வருகிறேன்: தமிழில் டுவிட் போட்ட ராகுல் காந்தி!

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அனைத்து அரசியல் தலைவர்களும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழில் டுவீட் செய்து தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி இன்று தமிழகம் வருகிறேன் என்றும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பார்ப்பதற்காக தமிழகம் வருகிறேன் என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் கூறியபடியே அவர் தமிழகம் வந்துவிட்டார் என்பதும் தற்போது அவர் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று ராகுல் காந்தியின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த வருகையின் போது அவர் தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை செய்வார் என்றும் திமுக தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களும் இன்று சென்னை வரவிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தியின் வரவும் தமிழக அரசியலை பெரும் பரபரப்பாக்கியுள்ளது