நானும் அரசியலில் இருந்து விலகுகிறேன்: ரஜினியை அடுத்து அரசியலில் இருந்து விலகிய பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த முடிவை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதன் மூலம் லாபம் பெறலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்கும் ஒருசில ரசிகர்களுக்கும் இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியாக இருந்தது ஆனால் உண்மையான ரஜினி ரசிகர்கள் ரஜினியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவருடைய முடிவை ஏற்றுக் கொண்டனர்
இந்த நிலையில் ரஜினியை அடுத்து நானும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்பியவர்களில் ஒருவர் தமிழருவி மணியன். அவர் ரஜினியின் அரசியல் ஆலோசகராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்ததும் இனி நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்றும் இறப்பு வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். திமுகவை விட்டு கண்ணதாசன் விலகும்போது போய் வருகிறேன் என்று கூறினார் ஆனால் நான் போகிறேன் திரும்பி வர மாட்டேன் என்று தமிழருவி மணியன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது