பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எவ்வளவு லஞ்சம்: கமல்ஹாசனின் பட்டியல்!

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே ஆளும் அதிமுக அரசின் லஞ்சம் ஊழல் குறித்து ஆவேசமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் தற்போது தேர்தல் பிரச்சாரத்திலும் ஊழலை முக்கிய மையமாக வைத்து அவரது பேச்சு இருக்கிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறப்பு சான்றிதழ் வாங்குவது முதல் இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை அரசு அலுவலகங்களில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது என்பதை பட்டியலிட்டு ஒரு பட்டியலையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
இந்த பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ’பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி #நான்_கேட்பேன் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார்.
பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? #நான்_கேட்பேன் pic.twitter.com/hJLpQ1XG9s
— Kamal Haasan (@ikamalhaasan) December 28, 2020