பொய் சாதனைகளை சொல்ல எத்தனை குறும்படங்கள்? தமிழ் நடிகை டுவீட்

 

பொய் சாதனைகளை சொல்வதற்கு எத்தனை குறும்படங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள் என்றும், தொலைக்காட்சி எங்கும் அரசியல் வேடதாரிகள் தங்களது நடிப்பு ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள் என தமிழ் நடிகை ஒருவர் டுவிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கமலஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீப்ரியா. இவர் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

kamal sripriya

அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் குறித்த கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்துவரும் ஸ்ரீபிரியா தற்போது சினிமாக்காரர்களுக்கு அரசியல் ஏன் என்று கேள்வி கேட்கும் அரசியல்வாதிகளுக்கு அதிரடியாக ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சினிமாகாரர்களுக்கு அரசியல் எதுக்கு என்று புலம்பும் மற்ற அரசியல் மனிதர்களிடம் ஒரு கேள்வி... தேர்தல் நேரத்தில் பாவம் உங்களுக்கும் சினிமா தான் உதவுகிறது.பொய் சாதனைகளைச்சொல்ல எத்தனை குறும்படங்கள்? தொலைக்காட்சி எங்கும்அரசியல் வேடதாரிகள் தங்கள் நடிப்பாசைகளை தீர்த்துக்கொள்வது வேடிக்கை!


 


 

From around the web