அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? கசிந்த தகவல்

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணி கட்சிகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது 

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைவது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது 

admk dmk

அதிமுக கூட்டணியில் அதிமுக 160 இடங்களிலும் பாமக 40 இடங்களிலும் பாஜக 34 இடங்களிலும் போட்டியிடும் என செய்திகள் கசிந்துள்ளது. ஒருவேளை தேமுதிக உள்பட ஒருசில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்தால் இந்த மூன்று கட்சிகளும் ஒரு சில இடங்களை தேமுதிகவுக்கு விட்டுகொடுக்கும் என்று கூறப்படுகிறது 

இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் கூட்டணியில் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. திமுக இந்தமுறை 200க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குழப்பத்தில் உள்ளன

From around the web