ஏழை எளியவர்கள் எப்படி ஒரு வாரத்திற்கான காய்கறி, மளிகை வாங்க முடியும்? அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

 
vegetables

இன்றும் நாளையும் ஊரடங்கு கிடையாது என்றும் ஆனால் திங்கட்கிழமை முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு என்றும் தமிழக அரசு சற்று முன் அறிவித்தது. குறிப்பாக காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்ததற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன 

மேல்மட்டத்தில் இருப்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினரும் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். ஆனால் ஏழை எளிய மக்கள் அன்றாடம் காய்ச்சிகள் எப்படி வாங்க முடியும்? அப்படியே வாங்கினாலும் அவர்களிடத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லை என்றால் அதை எப்படி பாதுகாக்க முடியும்? அரசு ஏழை எளியவர்களை பற்றி சிந்திக்காமல் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது

vegetables

ஒருநாள் விட்டு ஒருநாள் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்றும், ஒரு வாரம் மொத்தமாக காய்கறி மற்றும் மளிகை கடையை அடைக்க உத்தரவிட்டது ஏழை எளிய மக்களை சிந்திக்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து அரசு ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு சில மணி நேரங்கள் காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்க அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web