என் தாயையே இப்படி பேசுபவர்கள் மக்களை எப்படி பேசுவார்கள்: கண்கலங்கிய முதல்வர்!

 

என் தாயையே இப்படிப் பேசுபவர்கள் பொதுமக்களை எப்படி பேசுவார்கள் என கண்கலங்கி முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தைக் கூறினார்

A raja

இதனை அடுத்து அதிமுகவினர் உள்பட பல்வேறு தரப்பினர் ஆ ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவெற்றியூர் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆ ராசாவின் பேச்சை கண்டித்து என் தாயை எப்படி எல்லாம் திமுகவின் ஆ ராசா பேசியிருக்கிறார் பாருங்கள் என சொல்லி முதல்வர் பழனிசாமி கண்கலங்கினார்.

முதலமைச்சரின் தாயையே இப்படி பேசுபவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் பொது மக்களை எப்படி பேசுவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இதற்கு ஆண்டவன் தக்க தண்டனை கொடுப்பார் என்றும் தாய் பற்றியும் பெண்கள் குறித்தும் இழிவாக பேசுபவர்களுக்கு நிச்சயம் ஆண்டவன் தண்டனை கொடுப்பார் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web