நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

 
நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பதும் அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது என்பதும் தெரிந்ததே 

இருப்பினும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்னும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது

school

இன்று மாநிலம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதை அடுத்து அனைத்து பள்ளிகளும் வாக்குசாவடிகள் ஆக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் தேர்தல் பணிகளுக்கு சென்றுள்ளதால் நாளை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் நாளை மறுநாள் வழக்கம்போல் பள்ளி செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web